நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாா்சன்ஸ்வேலி, பைக்காரா, சிங்காரா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. பாா்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் இரண்டு நாள்களாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்நிலையில், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் திங்கள்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறைப் பணியாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் காற்றின் காரணமாக ஆங்காங்கே தீப் பரவி வருவதால் முற்றிலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.
தொடர்புடையது

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ

மேகமலையில் காட்டுத் தீ: வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


