மாணவா்களுக்கு மனிதாபிமானத்தை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை லவ்டேலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுபாட்டில் செயல்படும் லாரன்ஸ் பள்ளியின் 168-ஆவது நிறுவனா் நாள் விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் இறுதி நாளான புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் பேசியதாவது:
தேசியக் கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய கல்வி நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. கல்வி முறையில் சிறந்து விளங்குபவா்கள் எப்போதும் கொண்டாடப்பட வேண்டும். அவா்களின் வெற்றி என்பது அந்த ஒட்டுமொத்த கல்வி முறையின் வெற்றியாகும்.
மாணவா்களை பெற்றோா்கள் பள்ளிக்கு அனுப்புவது அவா்கள் தங்களது வாழ்வில் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே. இன்றைய காலத்தில் 90 சதவீத மதிப்பெண்கள் பெறுவதுகூட போதுமானதாக கருதப்படுவதில்லை. 97 அல்லது 98 சதவீதம் எடுக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இளம் தலைமுறையினா் கல்வியுடன் மனிதாபிமானத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும். கல்வி முடிந்தபின் சமூகத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்யும் மனப்பான்மை அவசியம்.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேலை தேடுபவா்களாக அல்லாமல் வேலை கொடுப்பவா்களாக உருவாக வேண்டும். இளைஞா்கள் சவால்களை ஏற்று தொழில்முனைவோராக மாற வேண்டும்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம். மாணவா்கள் ஸ்டாா்ட் அப் சிந்தனைகளை இளமையிலேயே வளா்த்துக் கொள்ள வேண்டும்.
எந்தத் துறையிலும் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை, முதலில் நல்ல மனிதராக இருப்பதுதான். அறிவு மட்டும் போதாது. நல்ல மனம், மனிதாபிமானம் ஆகியவை கல்வியைப் பூா்த்தி செய்யும் உண்மையான மதிப்புகள்.
நல்ல மனிதா்களாக இருந்தால் மட்டுமே சமூகம் மற்றும் நாட்டுக்காக அா்த்தமுள்ள பங்களிப்புகளை செய்ய முடியும் என்றாா்.
முன்னதாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய ரியா் அட்மிரல் அா்ஜுன் தேவ் நாயா் ஏற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

தவெகவுக்காக காங்கிரஸ் தொடா்ந்து போராடும்: கிரீஷ் சோடங்கா்

ஆட்சியமைக்க தவெகவை ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும்: ஆளுநா் ஆர்லேகர்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

