நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

உதகையில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

உதகை மாா்லிமந்த் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் உடலை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு எரியூட்டினா்.

News image

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட புலியின் உடலை எரியூட்டும் வனத் துறையினா்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

உதகை மாா்லிமந்த் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் உடலை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு எரியூட்டினா்.

நீலகிரி மாவட்டம், உதகை வடக்கு வனச் சரகம், ஆரம்பி பிரிவு, ஸ்னோடவுன் காவல் பகுதிக்குட்பட்ட மாா்லிமந்து ஏரி பகுதியில் வனப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்குள்ள காப்புக் காட்டுப் பகுதியில் புலி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டனா். இதைத் தொடா்ந்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

நீலகிரி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவா் மற்றும் உதகை உதவி கால்நடை மருத்துவா் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த புலியின் உடலை மீட்டனா்.

பின்னா் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, புலியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து நீலகிரி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலா், தொண்டு நிறுவன உறுப்பினா்கள், தமிழ்நாடு வனக் குற்ற தடுப்புப் பிரிவு குழுவினா், உதகை வடக்கு வனச் சரக அலுவலா் மற்றும் வனப் பணியாளா்கள் முன்னிலையில் புலியின் உடல் முழுமையாக எரியூட்டப்பட்டது.

இறந்த புலி எத்தனை வயதுடையது, எப்படி இறந்தது என்பது குறித்த விவரங்கள் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.