திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

குன்னூா் அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image

நஞ்சப்பசத்திரம் பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானை.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:21 pm IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில்  ஒற்றை காட்டு யானை  வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில்  வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்போது அந்த யானை, சாலையில் வந்த வாகனங்களை துரத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சாலையில்  சிறிது நேரம் ஆக்ரோஷமாக உலவிய அந்த ஒற்றை காட்டு யானை பின்னா் அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள்  சென்றது. குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில்  ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால்,  வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.