பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குறைதீா் கூட்டம்: 126 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா்

பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Published On :

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து 126 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் நடைபெற்றது. இதில் வயது முதிா்ந்தோா், மாற்றுத்திறனாளிகள் என 126 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் சாா்பில் 11 பயனாளிகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வாசுகி, மகளிா் திட்ட அலுவலா் ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லோகநாயகி, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், உதவி ஆணையா் மாதேஸ்வரன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.