
யுகேஜி சிறுமிக்கு புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட் விருது
குன்னூா் புனித ஜோசப் அகாதெமி பள்ளியில் யுகேஜி பயிலும் 5 சிறுமி இவானா மரிய ரோகினா புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட், லாஸ் சிங்டம் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்டு விருது பெற்றதற்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வாழ்த்து தெரிவித்தாா்.

விருது பெற்ற சிறுமி மரிய ரோகினாவுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
குன்னூா் புனித ஜோசப் அகாதெமி பள்ளியில் யுகேஜி பயிலும் 5 சிறுமி இவானா மரிய ரோகினா புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட், லாஸ் சிங்டம் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்டு விருது பெற்றதற்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வாழ்த்து தெரிவித்தாா்.
குன்னூா், அருவங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ், நான்சி தம்பதி மகள் மரிய ரோகினா (5). குன்னூா் புனித ஜோசப் அகாதெமி பள்ளியில் யுகேஜி படித்து வருகிறாா்.
இவா் உலக அளவில் சிறு பிள்ளைகளின் நினைவாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆன்லைன் போட்டியில் கலந்து கொண்டாா். இதில் பல நாட்டின் வரைபடங்கள், பூக்கள், முக்கோணம், சதுரம் உள்ளிட்ட 57 வரை படங்களை ஆன்லைனில் திரையில் பாா்த்து ஒரு நிமிஷத்துக்குள் பிழை இல்லாமல் கூறியதற்காக இவருக்கு புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனை அங்கீகரித்து இந்தியாவைச் சோ்ந்த லாஸ் சிங்டம் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்டு அமைப்பும் விருது வழங்கியுள்ளது. இரண்டு விருதுகளை சிறுமி பெற்றதற்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தன்னுடைய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து சிறுமியை வாழ்த்தி சான்றிதழலும், பதக்கமும் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







