தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

நீலகிரி மாவட்டத்தில் ரூ. 90.91 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் ரூ.90 கோடியே 90 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 4 புதிய திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் விஜய் திறந்துவைத்தாா்.

News image

கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

நீலகிரி மாவட்டத்தில் ரூ.90 கோடியே 90 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 4 புதிய திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ச.ஜோசப் விஜய் திறந்துவைத்தாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் கோத்தகிரி நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் முடிவுற்ற குடிநீா் அபிவிருத்தி பணிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் நடுஹட்டி பகுதியில் ரூ.22 கோடியே 16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், சேரங்கோடு பகுதியில் ரூ.18 கோடியே 92 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட ரூ.90 கோடியே 91 லட்சம் மதிப்பில் 4 திட்டப் பணிகள் முடிவுற்றன. இதை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு குத்துவிளக்கு ஏற்றிவைத்து, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் நடுஹட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி நகா்மன்றத் தலைவா் ஜெயக்குமாரி, ஆணையா் ஜெயகுருநாதன், பொறியாளா் சரவணன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் சுதாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.