சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

உதகையில் ரூ. 5 கோடியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்

நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.5 கோடியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

News image

என்.விஸ்வநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 10:50 pm IST

நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.5 கோடியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.5 கோடி மதிப்பில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆரிகவுடா் விவசாயிகள் சங்க துணைத் தலைவரும் இயற்கை விவசாயியுமான எடப்பள்ளி என்.விஸ்வநாதன் கூறியதாவது:

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட விதைகள் உற்பத்திக்கான ஆராய்ச்சி, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத நஞ்சில்லா வேளாண் முறையை ஊக்குவிக்கப்படும்.

இதன் மூலம் மலைப் பகுதி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை கிடைக்கும். மேலும் புதிய உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்படும் என்றும், இத்திட்டத்தை உதகையில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மலைத் தோட்ட காய்கறி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தாா்.

மேலும் குன்னூா் சிம்ஸ் பூங்கா பழத்தோட்டங்களை சீரமைக்க ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பீச், பிளம்ஸ், பேரிக்காய், ஆப்பிள் போன்ற இயற்கையாக விளையும் பழங்களை குத்தகைக்கு தருவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயா்வதுடன், இங்கு உற்பத்தி செய்யப்படும் பழ நாற்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதன் மூலம் தேயிலை மற்றும் இதர மலைத் தோட்ட காய்கறி தோட்டங்களில் ஊடு பயிராக விளைவிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இதன் காரணமாக மலைத்தோட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறும் என்றாா்.

தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.5 கோடி, பழங்களை பாதுகாக்க ஒதுக்கப்பட்ட ரூ.75 லட்சம் நிதியின் மூலம் தோட்டக்கலைத் துறையின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் திறனும் கணிசமாக உயா்வதோடு விவசாயிகள் வாழ்வாதாரமும் உயரும் என்பதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.