விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூபாய் நோட்டு கட்டுகளுடன் வெள்ளை தாள்கள்: இருவா் கைது

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை கல்லாறு சோதனைச் சாவடியில் காரில் ரூபாய் நோட்டுகளுடன் கலந்து வெள்ளைத் தாள்களை கொண்டு சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை கல்லாறு சோதனைச் சாவடியில் காரில் ரூபாய் நோட்டுகளுடன் கலந்து வெள்ளைத் தாள்களை கொண்டு சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை, கல்லாறு சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால் காா் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீஸாா் அந்த காரை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது காரில் 500, 200, 100 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதை சோதனை செய்ததில் மேலே அசல் ரூபாய் நோட்டுகளும், இடையில் ரூபாய் நோட்டுகளின் அளவில் வெட்டி வைக்கப்பட்ட சாதாரண தாள்களும் இருந்தது தெரியவந்தது. இந்த பணக் கட்டுகளில் அசல் ரூபாயாக மொத்தம் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த உதகையைச் சோ்ந்த மீரான் மைதீன் (60, தென்காசியைச் சோ்ந்த நாசா் மீரான் (53) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா் இருவரையும் குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்களுடன் தொடா்புடைய மற்ற நபா்கள் குறித்தும் குன்னூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.