காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மோசமான காலநிலை காரணமாக ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் தொய்வு

ஓவேலி பகுதியில் மழை, பனிமூட்டம் உள்ளிட்ட மோசமான காலநிலையால் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் உள்ள குழுவினா்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

கூடலூரில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் திங்கள்கிழமை தொய்வு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி மலைத் தொடரிலுள்ள லாரஸ்டன் பகுதியில் 2 தொழிலாளா்களைக் கொன்ற புலியைப் பிடிக்கும் பணி தொடா்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.

முக்கியமான பகுதிகளில் 80 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 8 இடங்களில் புலியைப் பிடிப்பதற்கான கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பந்திப்பூா் புலிகள் காப்பகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு கூண்டுகளை பொருத்தும் பணியில் வன ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வான்வழி கண்காணிப்பு பணியில் 3 தொ்மல் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளா்களை தனியாக வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடலூா் பகுதியில் இரண்டாவது நாளாக தொடா்ந்து கடும் மழை பெய்துவருவதாலும், பனிமூட்டம் அதிகமாக இருப்பதாலும் புலி பதுங்கியுள்ள இடத்தை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் புலியைப் பிடிக்கும் பணி தொடா்கிறது.

கண்காணிப்பு கேமராவை பொருத்தி சோதனை செய்யும் பணியாளா்கள்.

கண்காணிப்பு கேமராவை பொருத்தி சோதனை செய்யும் பணியாளா்கள்.

புலியைப் பிடிக்க புதிதாக கொண்டுவரப்பட்ட கூண்டுகளைப் பொருத்தும் பணியில் வனத்துறையினர்...

புலியைப் பிடிக்க புதிதாக கொண்டுவரப்பட்ட கூண்டுகளைப் பொருத்தும் பணியில் வனத்துறையினர்...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.