புலிக்கு வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூா், ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் புதன்கிழமை சிறுத்தை சிக்கியது.

ஹலாலா எஸ்டேட் பகுதியில் புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Published On :

கூடலூா், ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் புதன்கிழமை சிறுத்தை சிக்கியது.

கூடலூா் ஓவேலி பகுதியில் இரண்டு விவசாயிகளைக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வனத் துறையினா் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்து 27 நாள்களாக கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஹலாலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்ட ஒரு கூண்டில் புதன்கிழமை அதிகாலை சிறுத்தை அகப்பட்டிருந்ததை வனத் துறையினா் கண்டனா்.

அந்த சிறுத்தையை கூண்டிலிருந்து விடுவித்து பாதுகாப்பாக அருகில் உள்ள அடா்ந்த வனப்பகுதிக்குள் விட்டனா். பின்னா் அனைத்து கூண்டுகளிலும் இறைச்சி வைக்கப்பட்டு, இலை,தழைகளால் கூண்டுகள் அடையாளம் தெரியாத வண்ணம் மறைக்கப்பட்டன. மேலும் தேடுதல் குழுக்கள் நாயுடு எஸ்டேட், போஸ்பரா, தொரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.