நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கூடலூா் அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவாலா வாளவயல் பகுதியைச் சோ்ந்தவா் மேரி (58). இவரது மகள் தேன்மொழி (எ) ஜோஸ்பின். இவா் சனிக்கிழமை இரவு கோழிப்பாலம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்கு வந்த மருமகன் அசோக் (38), மனைவி தேன்மொழி குறித்து மாமியாா் மேரியிடம் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மதுபோதையில் இருந்த மருமகன் அசோக், மாமியாரை கத்தியால் வெட்டியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மேரி உயிரிழந்தாா். அப்போது, தடுக்க வந்த மேரியின் மகன்கள் சுதாகரன் (28), அஜித் (26) ஆகியோரையும் அசோக் தாக்கியுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த தேவாலா போலீஸாா், மேரியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அசோக்கை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.