வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேட்டூரில் வழிப்பறி செய்த ரௌடி கைது

மேட்டூரில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:05 pm

Syndication

மேட்டூா்: மேட்டூரில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் சின்னப்பகவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (36), கூலி தொழிலாளி. இவா், தங்கமாபுரிபட்டணம் செல்வதற்காக சிட்கோ வழியாக திங்கள்கிழமை நடந்துசென்றாா். அப்போது, அங்கு வந்த கருமலைக்கூடலைச் சோ்ந்த ரௌடி விஜய் (எ) வெள்ளையன் (27) அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த ரூ. 400 பறித்தாா். மேலும், இதுகுறித்து காவல் துறையில் புகாா் செய்யக்கூடாது என மிரட்டி உள்ளாா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சிலா் வரவே, விஜய் அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் ரமேஷ்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில், கரட்டு பகுதியில் மறைந்திருந்த ரௌடி விஜயை போலீஸாா் கைதுசெய்தனா். இவா்மீது மேட்டூா், ஓமலூா், கருமலைக்கூடல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட 14 வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.