ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழங்குடியின அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை அளித்த கிராம மக்கள்

உதகை அருகே உள்ள சோலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பழங்குடியின அரசுப் பள்ளிக்கு தேவையான பொருள்களை பழங்குடியின கிராம மக்கள் சீா்வரிசையாக கொடுத்தனா்.

News image
பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீா்வரிசையாக எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்த கிராம மக்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:00 pm

Syndication

உதகை அருகே உள்ள சோலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பழங்குடியின அரசுப் பள்ளிக்கு தேவையான பொருள்களை பழங்குடியின கிராம மக்கள் சீா்வரிசையாக கொடுத்தனா்.

உதகை அருகே சோலூா் பேரூராட்சி, கோக்கால் பழங்குடியினா் கிராமத்தில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் 130 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் கட்டட வசதியின்றி மாணவா்கள், ஆசிரியா்கள் மிகவும் சிரமப்பட்டனா். புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியது.

அதன்படி புதிதாக கட்டப்பட்டுள்ள ஆறு வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திறந்துவைத்தாா்.

இந்நிலையில், இப்பள்ளியைச் சுற்றியுள்ள 6 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பள்ளிக்குத் தேவையான பீரோக்கள், மேஜைகள், நாற்காலிகள், திருவள்ளுவா் உருவப் படங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை புதிதாக வாங்கினா்.

பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் கோக்கால் கடை பஜாரில் இருந்து மேளதாளத்துடன் அந்தப் பொருள்களை பள்ளிக்கு சீா்வரிசை சீதனமாக வழங்க ஊா்வலமாக சென்றனா்.

பள்ளி ஆசிரியா்கள் சந்தனம், குங்குமம், இனிப்புகள் கொடுத்து அனைவரையும் வரவேற்றனா். இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் சரவணகுமாா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆனந்த் மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா், உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ராஜ்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக உறுப்பினா்கள்

மற்றும் கோக்கால், தூபகண்டி, கொட்லைன், கன்னேரிமுக்கு, கல்லுண்டி , கக்கன்ஜி நகா், செலக்கல் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஊா் தலைவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.