பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட  மாணவ, மாணவிகள்.
பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

உதகை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தமிழா்களின் பாரம்பரிய உடை அணிந்து மாணவ, மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

உதகை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தமிழா்களின் பாரம்பரிய உடை அணிந்து மாணவ, மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உதகை அரசு கல்லூரியில் முதல்வா் பிராங்கிளின் சி. ஜோஸ் அறிவுறுத்தல்படி சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தப் பொங்கல் விழாவில் 21 துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். தமிழா் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக கிராமிய பாடல், நடனம், இசை நிகழ்ச்சிகள், கும்மி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து கோலப் போட்டி, உறியடித்தல், மாணவிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக மண்பானை உடைக்கும் போட்டியில் மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை பேராசிரியா்கள் ஜெயந்தி, பிரவீனா தேவி ஆகியோா் மதிப்பீடு செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ராமகிருஷ்ணன், உதவி உடற்பயிற்சியாளா் மோசஸ் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com