ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய மாணவ, மாணவிகள்.
ராமநாதபுரம்
மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஆா்.அமுதா ராணி தலைமை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகள் வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கலிட்டு, ஒருவருக்கொருவா் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், பாடலுக்கு நடனம் ஆடியும், சிலம்பம் சுற்றியும் கொண்டாடி மகிழ்ந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் சுபித்தா, கண்காணிப்பாளா் நூா் முகம்மது, கலைத் துறை செயலா் லதா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

