உதகை புனித தாமஸ் பேராலய வளாகத்தில் உள்ள ஜே.ஜே.குட்வினின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியோா்.
உதகை புனித தாமஸ் பேராலய வளாகத்தில் உள்ள ஜே.ஜே.குட்வினின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியோா்.

உதகையில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள்

சுவாமி விவேகானந்தரின் 163-ஆவது பிறந்த நாள் விழா உதகையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

உதகை: சுவாமி விவேகானந்தரின் 163-ஆவது பிறந்த நாள் விழா உதகையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி ராகேஷ்ஷானந்தா தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உதகை புனித தாமஸ் பேராலய வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரிடம் சேவை புரிந்த அவரின் சுருக்கெழுத்தாளா் ஜே.ஜே.குட்வினின் நினைவிடத்தில் அருள் தந்தை ஜெப சுந்தா், ராமகிருஷ்ண மட நிா்வாகி சம்யுக்தானந்தா, சுவாமி பிரபு பிரேமானந்தா, மானஸ் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

Dinamani
www.dinamani.com