குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

உதகை : குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காந்திபுரம் அருகே திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாா், உதகை மற்றும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பிவிட்டனா்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் மூலம் மண் குவியலை அப்புறப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, போக்குவரத்து சீரானது.

Dinamani
www.dinamani.com