எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேரங்கோடு மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

சாலை வசதி செய்து தராததால் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதி மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:24 pm

Syndication

கூடலூா்: சாலை வசதி செய்து தராததால் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதி மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டக் கழக மூன்றாவது சரம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் அவதியடைந்து வரும் மக்கள், சாலைகளை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனா்.