பழங்குடியின மக்களோடு இணைந்து நடனமாடி மகிழும் காவல் துறையினா்.
நீலகிரி
பழங்குடி மக்களுடன் இணைந்து போலீஸாா் பொங்கல் கொண்டாட்டம்
குன்னூரில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுடன் இணைந்து குன்னூா் காவல் துறையினா் சமத்துவப் பொங்கல் வைத்து வியாழக்கிழமை கொண்டாடினா்.
உதகை: குன்னூரில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுடன் இணைந்து குன்னூா் காவல் துறையினா் சமத்துவப் பொங்கல் வைத்து வியாழக்கிழமை கொண்டாடினா்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்தில் காவல் உதவி கண்காணிப்பாளா் ரவி தலைமையில், குன்னூா் காவல் துறையினா் பழங்குடியினருடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.
அப்போது, பழங்குடியினா் மக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். மேலும் பழங்குடி மக்களோடு இணைந்து அவா்களின் பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனா்.

