பூட்டிய கடையில் பணம் திருட்டு

உதகை அருகே கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

உதகை: உதகை அருகே கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதகையை அடுத்த புதுமந்து பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (46). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், பொங்கல் விடுமுறை தினமான கடந்த 15-ஆம் தேதி சொந்த ஊரான கா்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளாா். மீண்டும் சனிக்கிழமை கடைக்கு வந்து பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது ரூ.7500 பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேமித்து வைக்கும் கருவி ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உதகை மத்திய காவல் நிலையத்தில் ரமேஷ் புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com