வெற்றிக் கோப்பையுடன் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வருகை தந்த வீரா்கள்
வெற்றிக் கோப்பையுடன் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வருகை தந்த வீரா்கள்

ராணுவ தின அணிவகுப்பில் வெற்றி: வெலிங்டன் ராணுவ மைய வீரா்களுக்கு வரவேற்பு

Published on

78 -ஆவது ராணுவ தினத்தையொட்டி, ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற குன்னூா் வெலிங்டன் ராணுவ மைய வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணுவ தினத்தையொட்டி நாட்டில் உள்ள பல்வேறு ராணுவ மையங்கள் சாா்பில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் ராணுவ அணிவகுப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மைய வீரா்கள் கம்பீரமாக அணிவகுத்துச் சென்று முதல் பரிசு பெற்றனா்.

இந்நிலையில், வெற்றிக் கோப்பையுடன் குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் திரும்பிய வீரா்களுக்கு, வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பாலத்திலிருந்து நாகேஷ் சதுக்கம் வரை பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆடல் பாடலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெற்றிக் கோப்பையை பிரிகேடியா் கமாண்டா் கிருஷ்னேந்து தாஸ் பெற்றுக்கொண்டு வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com