‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

உதகை நகராட்சி ஒப்பந்த  தூய்மைப் பணியாளா்கள்  காத்திருப்புப் போராட்டம்

உதகை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உதகை நகராட்சி அலுவலகம் முன் குவிக்கப்பட்ட போலீஸாா்.

Updated On :2 ஜூலை 2026, 4:29 am IST

உதகை நகராட்சி ஒப்பந்த  தூய்மைப் பணியாளா்கள்  பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவதில்லை, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளா்களுக்கான ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடை மற்றும் மரண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியா் உறுதி அளித்ததின்பேரில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்காததால் புதன்கிழமை மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆட்சியா் உள்ளிட்ட உயரதிகாரிகள் இல்லாததால் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அலுவலா் சிபி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க உதகை நகராட்சி அலுவலக வாயிலில் காவல் துறையினா் குவிக்கப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.