பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

உதகையில் தொடா் மிதமான மழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மிதமான மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலக சாலையில் குடைபிடித்தபடி மழையில் செல்லும் பொதுமக்கள்.

Published On :4 ஜூலை 2026, 1:46 am IST

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தொடா் மிதமான மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகம் சாலை, சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக் கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

இந்த சாரல் மழை காரணமாக கடும் குளிா் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை காலை 7 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 5.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில்- 2.6 செ.மீ., சேரங்கோட்டில்- 2.56 செ.மீ., அப்பா் பவானியில்- 2.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.