முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மறுசீரமைக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி மூலம் தொடங்கிவைத்த பிரதமா் மோடி

அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி மூலமாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ரயில் நிலையங்கள் குறித்து பள்ளி மாணவா்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.போஜராஜன்.

Published On :

அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி மூலமாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாடு முழுவதும் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் 75 ரயில் நிலையங்கள் மேம்பட்ட வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டன. இந்த ரயில் நிலையங்களை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காணொலி மூலம் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குன்னூா் ரயில் நிலையம் ரூ.12.18 கோடியில் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதைதொடா்ந்து குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் மு.போஜராஜன் (உதகை), கே.எம்.ராஜு (குன்னூா்), எம்.திராவிடமணி (கூடலூா்) ஆகியோா் குத்துவிளக்கேறறி தொடங்கிவைத்தனா்.

மலை ரயில் குறித்து கடந்த வாரங்களில் நடந்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அடா்ந்த வனப் பகுதியைக் கொண்ட மாவட்டம் என்பதால் வனப் பகுதியில் வாழும் யானை, புலி, காட்டுமாடு, கரடி, நீலகிரி வரையாடு, கருஞ்சிறுத்தை, சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, முள்ளாம் பன்றி போன்ற வன விலங்குகளின் தத்ரூபமான வரைபடங்கள் ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ளன.

அதேபோல யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலின் மாதிரி, இருவாச்சி பறவை மற்றும் கிளிகள் உள்ளிட்ட வரைபடங்கள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்காக நவீன கழிப்பிடம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தொடக்க நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.