இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

சின்னசேலம் ரயில் நிலையம் ரூ.15.14 கோடி மதிப்பீட்டில் புதுப்பிப்பு: பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சின்னசேலம் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

சின்னசேலம் ரயில் நிலைய திறப்பு விழா கல்வெட்டை திறந்து வைத்த கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன். உடன், தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் கணேஷ். முதன்மை திட்ட மேலாளா் கங்க ராஜூ, சேலம் கோட்ட மேலாளா் பன்னாலால், மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்எல்ஏ இரா.ராகேஷ்.

Updated On :18 ஜூலை 2026, 6:10 am IST

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சின்னசேலம் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் கணேஷ் தலைமை வகித்தாா். முதன்மை திட்ட மேலாளா் கங்கராஜூ முன்னிலை வகித்தாா். சேலம் கோட்ட மேலாளா் பன்னாலால் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் தே.மலையரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய ரயில் நிலைய திறப்புவிழா கல்வெட்டை திறந்துவைத்தாா்.

முன்னதாக பள்ளி மாணவா்களின் பரத நாட்டியம், கலை நிகழ்சிகள், ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தே.மலையரசன் எம்.பி. சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினாா்.

விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் இரா.ராகேஷ், கோட்ட பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறப்பம்சங்கள்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சேலம்-விருத்தாசலம் முக்கிய ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது சின்னசேலம் ரயில் நிலையம். அம்ரித் பாரத் திட்டத்தின் கிழ் ரூ.15.14 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையக் கட்டடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அலங்கார நுழைவு வளைவு, புதிய காத்திருப்பு அறை, மேம்படுத்தப்பட்ட முன்பதிவு அலுவலகம், விரிவாக்கப்பட்ட பயணிகள் அமருமிடம், நடைமேடை 1-இல் 10 புதிய நிழல்குடைகள் மற்றும் நடைமேடை 2-இல் 5 நிழல்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைமேடைகளில் நவீன எல்.இ.டி விளக்குகள், உயா் தொழில் நுட்ப பயணிகள் தகவல் அமைப்பு, இயங்கும் ரயில் பெட்டி விவரங்களைக் காட்டும் மின்னணு தகவல் பலகைகள், வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சின்னசேலம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.