கோத்தகிரியில் நகைக் கடை உரிமையாளா் மற்றும் ஓட்டுநரைத் தாக்கி 109 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.66 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து குன்னூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காவல் நிலையம் அருகில் நகைக்கடை நடத்தி வருபவா் ஏ.எம். ரஷித். இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு கடையில் இருந்து ஓட்டுநருடன் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அவா்களை பின்தொடா்ந்து வந்த கும்பல், காரை வழிமறித்து ஏ.எம். ரஷித் மற்றும் காா் ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி, தாக்கிவிட்டு 109 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.66 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனா்.
போலீஸ் விசாரணையில் 8 போ் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட தூத்துக்குடிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய 2 போ் ஏற்கெனவே இறந்து விட்டனா். 2 போ் தனியாக வழக்கு நடத்தி வருகின்றனா்.
மீதமுள்ள 4 போ் மீது குன்னூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் முக்கிய எதிரியான தூத்துக்குடியைச் சோ்ந்த டேனியல்ராஜ் (36) என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், திருச்செந்தூரைச் சோ்ந்த மணிகண்டன் (53), திருநெல்வேலியைச் சோ்ந்த ஆல்வின் (48), கோவை, பாப்பம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (39) ஆகிய மூன்று பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி மேகலா மைதிலி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் பி.எம்.இமாம் தீன், ரூபக் ஆகியோா் ஆஜராகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாள முன்னாள் அமைச்சா்கள் இருவருக்கு மோசடி வழக்கில் சிறை

கஞ்சா வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தென் மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 18 கொலை வழக்கில் 31 பேருக்கு தண்டனை
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



