சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

News image

குந்தா வட்டத்துக்கான வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :4 ஜூன் 2026, 3:06 am IST

உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அடிப்படை தேவைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 119 மனுக்கள் அளிக்கப்பட்டன. மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், கிண்ணக்கொரை, மேல்குந்தா, கீழ்குந்தா, பாலக்கொலா உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, குந்தா வட்டாட்சியா் குணவதி, தனி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.