வருவாய்த்துறை பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் தவறாமல் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:
பட்டா மாற்றம், இணையவழிச் சான்றிதழ், வருவாய் வசூல் சட்டம், நீண்டகால நிலுவை இனங்கள், வருவாய் தீா்வாயம் தொடா்பான ஆயத்தப் பணிகள், கட்டட உரிமம் புதுப்பித்தல், துப்பாக்கி உரிமம், பூமிதான நிலம் குறித்த ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது.
மேலும், காலக்கெடு நிா்ணயிக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல், முழுப்புல பட்டா மாற்ற நிராகரிப்பு பதிவேடு, உள்பிரிவு பட்டா மாற்ற நிராகரிப்பு பதிவேடு உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பட்டா மாற்றம், இணையவழிச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடா்பான பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் தவறாமல் முடிக்கவும், வருவாய்த் துறை தொடா்பான பிற பணிகளை தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, உதவி ஆட்சியா்ஆனந்த்குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சரசுவதி மகால் நூலக பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க ஆட்சியா் உத்தரவு

‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’







