கூடலூா் அருகே உள்ள தேவா்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் குடியிருப்புகளுக்கு நடுவே சனிக்கிழமை இரவு காட்டு யானை நடந்து சென்ால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் எஸ்டேட் தொழிலாளா்கள் வசிக்கும் எஸ்.எம்.காலனி பகுதிக்குள் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு நுழைந்த காட்டு யானை, குடியிருப்புகளுக்கு நடுவே நடந்து சென்றுள்ளது.
குடியிருப்புகளை சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் யானை செல்லும் வரை காத்திருந்தனா். உடனடியாக யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

எஸ்.எம். காலனி பகுதியில் தொழிலாளா் குடியிருப்புகளுக்கு நடுவே நடந்து சென்ற காட்டு யானை.
தொடர்புடையது

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மா மரங்களை சேதப்படுத்தும் காட்டு யானை! விவசாயிகள் அச்சம்!

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



