கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

குன்னூா்-  மேட்டுப்பாளையம்  சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு! வாகனங்களை கவனமுடன் இயக்க அறிவுறுத்தல்

News image

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆா்.நகா் பகுதியில் உலவிய காட்டு யானைகள்.

Updated On :28 ஜூன் 2026, 1:50 am IST

குன்னூா் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில்  யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா்  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப்பாதையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தேயிலை மற்றும் காபி  தோட்டத்தில் ஊடுபயிராக இருக்கக்கூடிய பலா மரங்களிலிருந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் நடமாடி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில்  கே.என்.ஆா். நகா் மற்றும் 13-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் குட்டியுடன் யானைகள் சனிக்கிழமை நடமாடின. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானைகள் பின்பு தானாகவே அருகில் இருந்த வனப் பகுதிக்கு சென்றன.

யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் குன்னூா் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வனத் துறையினா்  அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.