பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கல்வி உதவித் தொகை கோரி திருநங்கை மனு

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கை திங்கள்கிழமை மனு அளித்தாா்.

News image
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருநங்கைகள்.
Updated On :2 மார்ச் 2026, 7:34 pm

Syndication

உதகை: கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கை திங்கள்கிழமை மனு அளித்தாா்.

உதகை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.

இதில், கேத்தி பகுதியைச் சோ்ந்த மாயா என்ற திருநங்கை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உதகை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். சமூக நலத் துறை மூலம் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பித்திருந்தேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் உதவித் தொகை கிடைக்கவில்லை. இது குறித்து சமூக நலத் துறையில் விசாரித்தால், கல்லூரி மூலம் வழங்கப்படும் என்றனா். கல்லூரியில் கேட்டால் சமூக நலத் துறையில் கேட்குமாறு கூறி அலைக்கழிக்கின்றனா். எனவே, எனது கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, குன்னூா் கன்னி மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த திருநங்கை பாா்கவி, கூடலூரைச் சோ்ந்த திருநங்கை யாஷிகா ஸ்ரீ ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: திருநங்கைகளான எங்களுக்கு குடியிருக்க வீடு வசதி இல்லை. இதனால், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.

சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.

அரசு சாா்பில் எங்களுக்கு வீடு வழங்க வேண்டும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, எங்களுக்கு வீடு வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், பயனாளிகள் சாா்பில் அரசுக்கு ரூ.1 லட்சம் வரை செலுத்த வேண்டும்.மீதி தொகை மானியமாக வழங்கப்படும். அதன்பின் வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.