சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு


நீலகிரி மாவட்டம் உதகை கோ்ன்ஹில் வனப் பகுதியில், ஆல் இந்தியா மகளிா் மாநாடு (அஐரஇ) சாா்பில், ‘வனமும் வாழ்வும்’ திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், வன உயிா் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவா்களின் பங்கு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஈர நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், ஈர நிலங்கள் நீா் வளத்தை பாதுகாப்பதில், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில், இயற்கை சமநிலையை பேணுவதில் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, ‘வனமும் வாழ்வும்’ திட்டத்கர பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்திய ஆசிரியா்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...