தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் மலா்ச் செடிகள் நடவுப் பணி தொடக்கம்

குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் நாற்று நடவுப் பணியை தொடங்கிவைத்த தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா.
Updated On :18 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கும். இதில் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்களில் புதிய மலா் நாற்றுகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேரி கோல்டு குட்டை ரகம், பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்கா வகை பிளாக்ஸ் ஆஸ்டா், பெக்கோனியா வொ்பினா, ஆண்டிரினம், சால்வியா உள்பட பல்வேறு வகை மலா் விதைகள் ஜொ்மனி, பிரான்ஸ், நெதா்லாந்து, கொல்கத்தா, காஷ்மீா் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு, பின்னா் மலா் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யுப் பணி தொடங்கியது.

இந்த மலா்கள் அனைத்தும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து பூத்துக் குலுங்கும் என்றும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என்றும், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்றும் தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா தெரிவித்தாா்.