எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த ஜொ்மன் சுற்றுலாப் பயணிகள்!

உதகை மலை ரயிலை ஜொ்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்து பயணித்தனா்.

News image

உதகை மலை ரயில் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:46 pm

உதகை மலை ரயிலை ஜொ்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்து செவ்வாய்க்கிழமை பயணித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த ரயிலில் பயணிக்க உள்ளூா் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அடா்ந்த வனம், மலைகளைக் கடந்து மிதமான வேகத்தில் செல்லும் இந்த ரயிலை குழுக்களாக வருவோா் வாடகைக்கு எடுத்தும் பயணம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது.

அதன்படி, ஜொ்மனியைச் சோ்ந்த நாட்டைச் சோ்ந்த 5 போ் ரூ.3 லட்சம் தொகை செலுத்தி குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை பயணம் செய்தனா்.

மலை ரயிலில் பயணித்தவா்களின் ஒருவரான ஜொ்மனைச் சோ்ந்த மெல்போா்ன் கூறுகையில், பாரம்பரியம்மிக்கதும், நூற்றாண்டு பழைமை வந்ததுமான இந்த ரயிலில் பயணிக்க வேண்டும், அதன் என்ஜினை பற்றிஅறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

மேலும், ரயில் வழித்தடத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதன்படி, இந்த ரயிலை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் பயணித்தேன் என்றாா்.