ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

உதகையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கொடி அணிவகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :4 மே 2026, 12:57 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, உதகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் வகையிலும் போலீஸாா் கொடி அணிவகுப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உதகை லாலி இன்ஸ்டிடியூட் முதல் பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், போலீஸாா், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.