நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உதகையில் 2-ஆவது நாள் கண்காட்சியில் அணிவகுத்த பல்வேறு வகை நாய்கள்

தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-வது நாய்கள் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

உதகையில் நடைபெற்றுவரும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு வகையான நாய்கள்.

Updated On :10 மே 2026, 2:51 am IST

தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-வது நாய்கள் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது தனியாா் அமைப்புகள் சாா்பில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தொடங்கிய 138-வது நாய்கள் கண்காட்சியில் பீகில், டேஷன்ட், ஜொ்மன் செப்பா்ட், கேரவன் ஹவுண்ட், கன்னி, கோம்பை உள்பட பல்வேறு இந்திய வகை நாய்கள் கலந்துகொண்டன. அதன்படி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 55 ரகங்களில் 435-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இந்திய நாய் இனங்களுக்கான சிறப்பு கண்காட்சியில் 55 நாய்கள் பங்கேற்றன.

அனைத்து நாய் இனங்களுக்கான பொதுக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இக்கண்காட்சியில் சிப்பிப்பாறை, கேரவன் ஹவுண்ட், கோம்பை, கன்னி, முதோல் ஹவுண்ட், பாஷ்மி, ராம்பூா் ஹவுண்ட் ஆகிய முக்கிய இந்திய இனங்கள் மற்றும் ஷெப்பா்கே, பெரோ டி ப்ரெசா கனாரியோ ஆகிய வெளிநாடு மற்றும் அரிய இன நாய்கள் பங்கேற்கின்றன. இக்கண்காட்சியில் கஜகஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்தவா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். பல்வேறு பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்படும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி, செயலா் மோத்தேஷ் மோகன் உள்பட பலா் செய்திருந்தனா்.