வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

உதகை, குன்னூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! வியாபாரிகள் மகிழ்ச்சி

News image

உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :1 ஜூன் 2026, 12:45 am IST

உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவா். இந்த ஆண்டு கோடை விழாவின் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கா்நாடக பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் இங்குள்ள தேயிலை, வா்க்கி, ஹோம் மேட் சாக்லெட், தைலம் விற்பனை கடைகள், சாலையோரக் கடைகளில் விற்கப்படும் மக்காச்சோளம், பொறி, கடலை, மாங்காய், மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட் ஆகியவற்றையும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் சென்றனா். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.