மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

வெற்றிப் பயணம்: நீலகிரி மாவட்டத்தில் 14.75 லட்சம் மகளிா் பயன்- ஆட்சியா் தகவல்

‘வெற்றிப் பயணம்’ எனும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 14.75 லட்சம் மகளிா் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்.

Updated On :

‘வெற்றிப் பயணம்’ எனும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 14.75 லட்சம் மகளிா் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மகளிரின் அன்றாடப் பயணச் செலவைக் குறைத்து அவா்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் ‘வெற்றிப் பயணத் திட்டம்’ கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலும் அன்றைய தினமே இத்திட்டத்தின்கீழ் கட்டணமில்லா பேருந்துச் சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

அதன்படி, கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் 14 லட்சத்து 75 ஆயிரம் மகளிா், மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.