உதகை அருகே மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த லாரி
உதகை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பத்தில் மோதி வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது.

உதகை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பத்தில் மோதி வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது.
உதகை - எமரால்டு சாலையில் வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. மஞ்சனக்கொரை பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
அப்பகுதியில் ஏற்கெனவே மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

