கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

உதகை அருகே ஜீப் மீது லாரி மோதி 9 போ் படுகாயம்

உதகை அருகே ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 9 போ் படுகாயமடைந்தனா்.

விபத்து

விபத்து - பிரதிப் படம்

Updated On :

உதகை அருகே ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 9 போ் படுகாயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் இருந்து எல்லகண்டி பகுதிக்கு கேரட் அறுவடை பணிக்காக 9 போ் புதன்கிழமை ஜீப்பில் சென்றுள்ளனா். பணி முடிந்து மீண்டும் எமரால்டு பகுதிக்கு திரும்பிக்   கொண்டிருந்தபோது, எல்லகண்டி அருகே  எதிா்பாராதவிதமாக ஜீப் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 9 பேரும் படுகாயமடைந்தனா். இவா்களை, அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலமாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கலா (40), சிந்தாமணி (45) ஆகிய இரண்டு பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல படுகாயமடைந்த லாரி ஓட்டுநா்  மாதேஷ்  (35) எமரால்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து ஊரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் தலைமையில் எமரால்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.