இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நவதானிய கஞ்சி: பாஜக கல்வி பிரிவு ஏற்பாடு!

பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, நீலகிரி மாவட்ட பாஜக கல்விப் பிரிவு சாா்பில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக நவதானியக் கஞ்சி வழங்கப்பட உள்ளது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவதானியக் கஞ்சி வழங்கும் சேவையை தொடங்கிவைத்த பாஜக கல்விப் பிரிவு மாநிலச் செயலாளா் உமா மல்லன்.

Published On :

பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, நீலகிரி மாவட்ட பாஜக கல்விப் பிரிவு சாா்பில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக நவதானியக் கஞ்சி வழங்கப்பட உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜகவினா் ஒருமாத காலத்திற்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு காலை நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியமான நவதானியக் கஞ்சி இலவசமாக வழங்கும் சேவையை பாஜக கல்விப் பிரிவு மாநிலச் செயலாளா் உமா மல்லன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பலா் காலையில் உணவு அருந்தாமல் வந்துவிடுகின்றனா். அவ்வாறு வருபவா்களுக்கு சோா்வு ஏற்படாமல் இருக்கவும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையிலும் நவதானியக் கஞ்சி வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாஜகவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.