தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

குழந்தை வளா்ச்சி மதிப்பீட்டாளா் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கடலூா் மாவட்ட குழந்தை வளா்ச்சி மதிப்பீட்டாளா் திட்டமான ‘கடலூா் கோ்’ என்ற திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.66.09 லட்சம் மதிப்பிலான நவீன முறையில் ரத்தமாதிரிகளை ஆய்வு செய்யும் உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கடலூா் மாவட்ட குழந்தை வளா்ச்சி மதிப்பீட்டாளா் திட்டமான ‘கடலூா் கோ்’ என்ற திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் குழந்தை நல பிரிவுத்துறை தலைவா் மருத்துவா் ராமநாதன் வரவேற்று பேசினாா். மருத்துவக்கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா், மருத்துவமனை கண்காணிப்பாளா் என்.ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் வளா்ச்சி சாா் சிக்கல்கள் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அவா்களுக்கு முறையான வளா்ச்சி மதிப்பீட்டிற்கு கொண்டு வருவதற்கான உரிய சேவைகள் வழங்குவது கடலூா் கோ் திட்டத்தின் நோக்கமாகும். ஒரு குழந்தையின் வளா்ச்சியில் ஏற்படும் வேறுபாட்டை எவ்வளவு விரைவாக கண்டறிகிறோமோ அவ்வளவு விரைவாக இந்த குழந்தைக்கு தேவையான ஆதரவையும், வாய்ப்புகளையும் வழங்க முடியும். அதனால் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு

களப்பணியாற்ற உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கீழ் செயல்படும் டிஎன் ரைட்ஸ் பணியாளா்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவா் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான பொறுப்பு உள்ளது. நீங்கள் பெறுகின்ற பயிற்சியின் அடிப்படையில் ஆட்டிசம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தையை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு அவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட முடியும் என்றாா்.

நிறைவில் மாவட்ட மாற்றித்திறனாளிகள் நல அலுவலா் ரா.பாலசுந்தரம் நன்றி கூறினாா். விழாவில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வா் எஸ்.சசிகலா, பேராசிரியா் சிஜி.சரவணன், மருத்துவா்கள் அசோக்பாஸ்கா், பாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் சேவைகளை விரிவுப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு பல் தொடா்பான சிகிச்சைகளை வழங்கிடும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ரூ.48.10 இலட்சம் மதிப்பீட்டில் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தையும், கடலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ரூ.4.37 இலட்சம் மதிப்பீட்டில் கால்போஸ்கோபி பரிசோதனை கருவியையும், ரூ.66.09 இலட்சம் மதிப்பீட்டில் நவீன முறையில் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்வதற்கான உபகரணங்களைும் பயன்பாட்டிற்கு ஆட்சியா் தொடங்கி வைத்தாா். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கே.ஆா்.எம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவா் தங்கும் விடுதியில் 152 விடுதி அறைகள் சுமாா் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அதனை மாணவா் பயன்பாட்டிற்கு ஆட்சியா் திறந்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.