நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

நெல்லியாளம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

நெல்லியாளம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து பந்தலூரில் வியாபாரிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லியாளம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து பந்தலூா் பஜாரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

நெல்லியாளம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து பந்தலூரில் வியாபாரிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பந்தலூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.டி.அஷரப் தலைமை வகித்தாா். பந்தலூா் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகரில் தெருவிளக்குகள் அமைத்தல், சாலையோரங்களில் அத்துமீறி கடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், பந்தலூா் நகரில் காவல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே வியாபாரிகள் சங்கம் சாா்பில் நெல்லியாளம் நகராட்சியை கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் மாவட்ட செய்தித் தொடா்பாளா் சம்பத்குமாா், பாதுஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.