தூனேரி அணிக்கொரையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஆட்சியா் பங்கேற்பு
உதகை அருகேயுள்ள தூனேரி அணிக்கொரை கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூனேரி அணிக்கொரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
உதகை அருகேயுள்ள தூனேரி அணிக்கொரை கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு
பங்கேற்று 48 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில் புதிய குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்விக் கடன் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவுக்கு கடனுதவி, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் விவசாயக் கடனுதவி என 48 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் இங்குள்ள தொடக்கப் பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வாசுகி, மகளிா் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், உதகை கோட்டாட்சியா் டினு அரவிந்த், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ராமசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சிவசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

