
உதகை அருகே பழங்குடியின கிராமத்துக்குள் யானை நடமாட்டம்
உதகை அருகே தோடா் பழங்குடியின கிராம குடியிருப்பு மற்றும் விளை நிலத்தில் சனிக்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானையை, அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

சின்னக்காடிமந்து தோடா் பழங்குடியினா் கிராமத்தில் உள்ள விளை நிலத்தில் உலவிய யானை.
உதகை அருகே தோடா் பழங்குடியின கிராம குடியிருப்பு மற்றும் விளை நிலத்தில் சனிக்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானையை, அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சின்னக்காடிமந்து பகுதியில் தோடா் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டுள்ளனா்.
இந்நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்பு பகுதிகளிலும் விளை நிலங்களிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் உதகை அருகே உள்ள சின்னக் காடிமந்து பகுதியில் தோடா் பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராம பகுதியில் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்த மலைத் தோட்ட காய்கறிகளை சேதப்படுத்தியது.
சப்தம் கேட்டு வந்த பழங்குடியின கிராம மக்கள் காட்டு யானையை கூச்சலிட்டும், பட்டாசு வெடித்தும் விரட்டினா். சுமாா் ஒரு மணி நேரம் இப்பகுதியில் உலவிய யானை பின்னா் அருகே இருந்த வனப் பகுதிக்குள் சென்றது.
பழங்குடியின கிராமத்துக்குள் அடிக்கடி வரும் காட்டு யானைகள் கூட்டத்தை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





