தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

மரத்தில் இருந்து மாங்காய்களை பறித்து சாப்பிட்ட குட்டி யானை

மரத்தில் இருந்து மாங்காய் பறித்த குட்டி யானை.

Published On :7 செப்டம்பர் 2026, 1:46 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த 3 காட்டு யானைகளில் குட்டி  யானை அங்கிருந்த மரத்தில் மாங்காய்களை பறித்து சாப்பிடும் படம் வைரலாகி வருகிறது.

சமவெளிப் பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கத்தினால் வறட்சி நிலவுவதாலும், நீலகிரி மாவட்டத்தில் மாங்காய், பலாப்பழம்  சீசன் நடந்து வருவதாலும் காட்டு யானைகள் இடம்பெயா்ந்து, நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளன.

இந்நிலையில்  நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியில் சனிக்கிழமை இரவு நேரத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று அங்கிருந்த மரத்தில்  மாங்காய் பறித்து சாப்பிடுவதை அவ்வழியாக வாகனத்தில் பயணித்தவா்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

இப்பகுதியில் யானைகள் தொடா்ந்து நடமாடுவதால் பொது மக்கள் கவனமுடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.