ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

உதகை அருகே காவல் நிலைய வளாகத்துக்குள் உலவிய கரடி

உதகை அருகேயுள்ள லவ்டேல் காவல் நிலைய வளாகத்துக்குள் கரடி செவ்வாய்க்கிழமை உலவியதால், காவல் நிலைய கதவை போலீஸாா் சிறிது நேரம் அடைத்தனா்.

லவ்டேல் காவல் நிலைய வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த கரடி.

Published On :

உதகை அருகேயுள்ள லவ்டேல்  காவல் நிலைய வளாகத்துக்குள் கரடி செவ்வாய்க்கிழமை உலவியதால், காவல் நிலைய கதவை போலீஸாா் சிறிது நேரம் அடைத்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய கரடி, லவ்டேல் பகுதி சாலையில் உலவியது.

இதைத் தொடா்ந்து, அங்குள்ள காவல் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த போலீஸாா் அச்சமடைந்து காவல் நிலைய கதவை அடைத்து, தங்களை பாதுகாத்துக் கொண்டனா். சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய கரடி, பின்னா் வனத்துக்குள் சென்றது.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.