
யானை தாக்கி வீடு சேதம்: எம்எல்ஏ ஆய்வு
பந்தலூா் அருகே யானை தாக்கி சேதமடைந்த வீட்டை கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

யானை தாக்கி சேதமடைந்த வீட்டை ஆய்வை செய்த கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி.
பந்தலூா் அருகே யானை தாக்கி சேதமடைந்த வீட்டை கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்துக்குள்பட்ட கொளப்பள்ளி அருகே உள்ள வட்டக்கொல்லி கிராமத்துக்குள் நள்ளிரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஞானப்பிரகாசம் என்பவரின் வீட்டின் பின்பகுதியை சேதப்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி வெள்ளிக்கிழமை சென்று, சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தாா். மறுசீரமைப்பதற்கான பொருள்களை வாங்கிக் கொடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






