சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நூல் விலை குறைப்பு: பின்னலாடை துறைக்கு பலன் தருமா?

பின்னலாடை தயாரிப்புக்கான மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்துள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2013, 2:58 am

கே.கே.மணிகண்டன்

பின்னலாடை தயாரிப்புக்கான மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்துள்ளது. இதனால் பின்னலாடைத் துறைக்கு நீண்டகால பலன் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை என பனியன் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 ÷சில மாதங்களாக திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நூல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நூல் விலையை குறைக்குமாறு ஒட்டுமொத்த பின்னலாடைத் தொழில் துறையினர் கேட்டுக்கொண்டபோதும், விலையை குறைக்க நூற்பாலைகள் மறுத்துவிட்டன. மத்திய ஜவுளித்துறை செயலரிடம் பின்னலாடைத் தொழில்துறையினர் முறையிட்டு, நூல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
 ÷இந் நிலையில், பருத்தி அறுவடை தொடங்கி இருக்கும் இச் சமயத்தில் நூல் விலையை கிலோவுக்கு ரூ.7 குறைத்துள்ளன நூற்பாலைகள். பருத்தி சீசன் தொடங்கும்போது, நூல் விலை குறைக்கப்படுவதும், பருத்தி கொள்முதல் செய்யப்படுவது முடிவுக்கு வந்த பின், பஞ்சு பதுக்கல், சிண்டிகேட் முறையில் பஞ்சு விலை ஏற்றப்படுவதும், அதன் காரணமாக நூற்பாலைகள் நூல் விலையை அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
 ÷மத்திய ஜவுளித்துறையின்கீழ் செயல்படும் பருத்தி ஆலோசனைக் குழு, நடப்பு பருத்தி சீசனில், விளைச்சலை முன்கூட்டியே அனுமானித்து 375 லட்சம் பேல் பஞ்சு கிடைக்கும் எனவும், 17 லட்சம் பேல் பஞ்சு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் என கணக்கிட்டு, இதில், நூற்பாலைகளுக்கு 258 லட்சம் பேல் பஞ்சு உள்பட உள்நாட்டுத் தேவைக்கு மொத்தம் 297 லட்சம் பேல் பஞ்சு தவிர 90 லட்சம் பேல் பஞ்சை ஏற்றுமதி செய்யலாம் எனவும், 40 லட்சம் பேல் பஞ்சை இறுதி கையிருப்பாக வைக்க ஆலோசனை வழங்கி உள்ளது.
 ÷90 லட்சம் பேல் பஞ்சு ஏற்றுமதி செய்யலாம் என்கிற நிலையில், பஞ்சு பதுக்கலில் வியாபாரிகள் வழக்கும்போல ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. உள்நாட்டில் பஞ்சு, நூல் விலை சீராக இல்லாமல் ஏற்றம் காணும்.
 ÷தற்போது நூற்பாலைகள் நூல் விலையில் கிலோவுக்கு ரூ.7 விலைக்குறைப்பு செய்திருப்பது பின்னலாடைத் துறைக்கு நீண்டகால பலனை ஏதும் உண்டாக்கப் போவதில்லை என தொழில்துறையினர் கருதுகின்றனர்.
 ÷இதுகுறித்து புதிய திருப்பூர் பகுதி சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியது: நூல் விலை குறைக்கப்பட்டாலும், அது உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பலன் தராது. நூல் வாங்கி பின்னலாடைகளை தயாரிக்க 30 நாள்கள் ஆகின்றன. நூல் விலை அதிமாக இருந்த சமயத்தில் நூல் வாங்கி தயாரித்த பின்னலாடைகளை ஈரோடு ஜவுளிச் சந்தையிலும், பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும்போது, நூல் விலை குறைக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, விலையை குறைத்துக் கேட்கின்றனர் வியாபாரிகள். நூல் விலை அதிகரிக்கும்போது, பின்னலாடைகளின் விலையை அதிகப்படுத்த முடிவதில்லை. அதிக விலை கூறினாலும், கொள்முதல் வியாபாரிகள் விலை தருவதில்லை. இதனால், பின்னலாடை உற்பத்தி தன்மைக்கும், அதை விற்கும் தன்மைக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகிறது.
 ÷மாதந்தோறும் நூல் விலை நிர்ணயிக்கப்படுவதால், பின்னலாடைத் தொழில் அதற்கேற்ற பாதிப்புகளை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே வருகிறது. பஞ்சு விலைக்கு ஏற்ப, நூற்பாலைகள் தங்களுக்கு லாபத்துடன் கூடிய கட்டுபடியாகும் விலையில் நூல் விலையை 6 மாதங்கள் வரையில் நிர்ணயம் செய்து அறிவித்தால், அதற்கேற்ப பின்னலாடை விலையை நிர்ணயித்து சந்தையில் விற்பனை செய்ய முடியும். நூற்பாலைகள், பின்னலாடைத் துறை சீரான வளர்ச்சியில் செல்லும் என்றாôó.
 பின்னலாடை ஏற்றுமதி, உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியது: நூற்பாலைகள் நூல் விலையில் கிலோவுக்கு ரூ.7 விலை குறைப்பு செய்திருப்பது என்பது, இதற்கு முன் நூல் தேக்கம் காரணமாக நூல் விலையில் மறைமுகமாக தள்ளுபடியாக வழங்கப்பட்ட தொகைதான். அதை தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
 ÷இந்த விலை குறைப்பு என்பதை நம்பி, வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை நிர்ணயம் செய்ய இயலாது. வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெற்று, அதற்கான மாதிரி ஆடைகளை அந்நாடுகளுக்கு அனுப்பி, அனுமதி பெற்று தயாரிப்புப் பணிகளை தொடங்க 2 மாத கால அவகாசம் தேவை. அப்போது நூல் கொள்முதல் செய்யும்போது, நூல் விலை ஏற்றத்துடன் காணப்படும்.
 ஆண்டுதோறும் பருத்தி விளைச்சல் சமயத்தில் பஞ்சு, நூல் விலை குறைக்கப்படுவதும், பருத்தி கொள்முதல் செய்வது இறுதிக் கட்டத்தை அடைந்ததும், சிண்டிகேட் அமைத்து பஞ்சு, நூல் விலையை அதிகரிப்பதும் வர்த்தக சூதாட்டமாகவே செய்யப்படுகிறது. பருத்தி விவசாயிகள் நலன் கருதி, பருத்திக் கழகம் பருத்தி கொள்முதல் விலையை நிர்ணயிப்பதுபோல, பருத்தி விற்பனை விலையையும் நிர்ணயம் செய்து அறிவித்தால், பஞ்சு, நூல் விலையில் சீரான போக்கு நிலவும். அதை நம்பி இருக்கும் பின்னலாடைத் தொழிலும் நூல் விலை ஏற்ற, இறக்க பிரச்னையால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.